அனுமதிப்பத்திரம் இன்றி 8 பசு மாடுகளை மிகவும் சித்திரவதை செய்து எடுத்துச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பகுதியில் இருந்து வவுனியா பகுதிக்கு இந்த பசு மாடுகள் ஏற்றி சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொடிகாமம் நகரப் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான எல்ப் ரக வாகனம் சோதனை இடப்பட்ட போது பசு மாடுகள் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்து எடுத்து சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.