சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்ற நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற வேளையில் ஊசி மலை பகுதியில் வைத்து திடீர் சுகயீனம் காரணமாக உறவினர்கள் நல்லதண்ணி நகருக்கு அழைத்து வந்து அங்கு இருந்து அவசர நோயாளர் காவுவண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வேளையில் அவர் உயிரழந்துள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் மொரட்டுவ பகுதியில் உள்ள 62 வயதுடைய அனுர குமார பெர்நாந்து என்பவர் ஆவார்.
அவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.