மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில், 336 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் கடந்த வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், மன்னார், பூநகரி, தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகின்றது.
இதேவேளை, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை வரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.