தமிழ்நிதி அருணா செல்லத்துரை இலிங்க பூமியிலிருந்து எழுதிய இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு வரலாற்று நூல் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.
லங்கா-நகரி, மா-தோட்டம், மண்ணாறு மாளிகைத்திடல், விடத்தல்தீவு, மன்னார் ஆகிய இடங்கள் பற்றிய வரலாற்றுத் தேடல்.’
இரவணனார் நூல் அறிமுக நிகழ்வு நேற்று (22) பிற்பகல் 2 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – மா. ஸ்ரீஸ்கந்தகுமார் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலய தவைவர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சட்டத்தரனிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்புப் பிரதிகள் வழக்கபட்டதை தொடர்த்து நூல் அறிமுகம் உரையை மா. ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்கள் (மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – மன்னார்) வழங்கினார் .
நூல் நயவுரை பண்டிதர் திருமதி ஏ.சுஜானா அவர்கள் வழங்கினார்.
நூலாசிரியரால் நூல் பற்றிய விளக்கமும் கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.








