திருகோணமலை மாவட்ட தனியார் மருந்தக நலன்புரி சங்கத்தின் விசேட இப்தார் நிகழ்வும் ஒன்று கூடலும் கிண்ணியா நகர பலநோக்கு மண்டபத்தில் (2025.03.20) ஆம் திகதி இடம்பெற்றது.
தனியார் மருந்தக உரிமையாளர்களின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அதிதியாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம் அஜித், மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.வி.எம்.ஹில்மி, திருகோணாமலை உணவு மற்றும் மருந்து பரிசோதனை உத்தியோகத்தர்களான T.சிவகுமார், U.முகுந்தன் முதலானோர்களுடன் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எஸ்.சஞ்சீவகாந்த், செயலாளர் எஸ். சாதிக், பொருளாளர் எஸ். ரணவீர, சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







