திருகோணமலை மாவட்டத்தில் 319399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் திருகோணமலை மாநகரசபையில் 38338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும்ன், கிண்ணியா நகரசபைக்கு 29131 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 9840 பேரும் சேருவில பிரதேச சபைக்கு 11859 வாக்காளர்களும்
கந்தளாய் பிரதேச சபைக்கு 39124 வாக்காளர்களும் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் மொரவெவ பிரதேச சபைக்கு 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ரொட்டவெவ, எத்தாபெந்திவெவ மஹதிவுல்வெவ, நொச்சிக்குளம், சாந்திபுரம், பன்குளம், அவ்வை நகர், நாமல்வத்த கம்பகொட்ட போன்ற பகுதிகளில் 6918 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை கோமரன்கடவல பிரதேச சபைக்கு 6692 வாக்காளர்களும், பதவிஸ்ரீபுர பிரதேச சபைக்கு 9740 பேர்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு 35617 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
குச்சவெளி பிரதேச சபைக்கு 29540 வாக்காளர்களும்
தம்பலகாமம் பிரதேசத்தில் 24761 வாக்காளர்களும், மூதூர் பிரதேசத்தில் 50671 வாக்காளர்களும் கிண்ணியா பிரதேச சபைக்கு 27168 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி மன்றங்களில் 126 அரசியல் கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக 138 வேட்பு மனுக்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டன.
அரசியல் கட்சிகள் சார்பாக கையளிக்கப்பட்ட 126 வேட்பு மனுக்களில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 103 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சுயேட்சைக்குழுக்கள் சார்பாக கையளிக்கப்பட்ட 12 வேட்பு மனுக்களில் 3 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 09 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான W.G.M. ஹேமந்த குமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை மாநகரசபை, கிண்ணியா நகரசபை உள்ளிட்ட 13 உள்ளுராட்சி மன்றங்களுக்கான 129 வட்டாரங்களில் 136 பேர் வட்டார ரீதியாகவும் 123 பேர் விகிதாசார அடிப்படையிலும் மொத்தமாக 259 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 103 அரசியல் கட்சிகளும், 09 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.