கொழும்பு – கண்டி வீதியில் ஹெலகல பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை (22) பிற்பகல் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான மற்றுமொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது இரு பேருந்துகளிலும் பயணித்த 35 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
