மூச்சடங்கா இரவுகள் திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் யாழ்தேவி கலைஞர்கள் கெளரவிப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு படக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர் வடமராட்சி கிழக்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் இன்று(22)கலந்து கொண்டு படக்குழுவினர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
இயக்குனர் கந்தசாமி லோககாந்தன் இயக்கத்தில் அன்பு மயில் அவர்களின் தயாரிப்பில் மூச்சடங்கா இரவுகள் இசை வெளியீட்டு விழா வரும் பங்குனி 29.03.2025 மாலை 03.00 மணிக்கு கொடிகாமம் நட்சத்திர மகாலில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் அதிகமான இடங்களில் படமாக்கப்பட்ட மூச்சடங்கா இரவுகள் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
