வவுனியாவில் வவுனியா சங்கமம் அறிமுக விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட பழைய மாணவர் ஒன்றியம் ”வவுனியா சங்கமம்” என்ற பெயரைக் கொண்டு இங்கிலாந்தில் சென்ற ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. தேசத்தின் உறவுகளாக இங்கிலாந்தில் ஒன்று கூடி மகிழ்வது மட்டுமல்லாமல் தேசத்தின் மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாட்டிலும் எல்லைப் புறக் கிராமங்களின் முன்னேற்றத்திலும் பங்கு கொள்வதற்குமாக உருவாக்கப்பட்ட ‘வவுனியா பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இன்று (22.03) இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, 25 முன்பள்ளிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் பென் டிரைவ் வழங்கி வைக்கப்பட்டதுடன், ‘சங்கமம் 2024’ நூல் அறிமுகமும் இடம்பெற்றது. அத்துடன் கலை கலாசார நிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், முத்து முகமது, பிரதேச செயலாளர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வவுனியா மாவட்ட பழைய மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








