திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜித் அவர்களின் தலைமையில் 2025-3-20ம் திகதி திருகோணமலையின் பல பக்கங்களிலும் இருந்தும் பொது சுகாதார பரிசோதகர்கள் வரவழைக்கப்பட்டு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அனைத்து BBQ கடைகளும் விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவற்றில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் சுமார் 60Kg கோழி இறக்கைகள் கைப்பற்றப்பட்டு 20 குற்றச்சாட்டின் கீழ் 8 BBQ கடைகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு கடையும் மூடப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஏனைய வர்த்தக நிலையங்களும் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

