மாத்தளை – இரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இசுருகம பிரதேசத்தில் இன்றைய தினம் அதிகாலை 05.00 மணியளவில் மனைவியை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படும் கணவன் இரத்தோட்டை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொ லை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவரும் மாத்தளை வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொ லை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
அவர்களுக்கு 11 வயதுடைய மகள் மற்றும் 13 வயதுடைய மகன் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பிறகு மறைந்திருந்த சந்தேகநபரான கணவன், இரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.