கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்தா, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கங்கத்தின் தேசிய அமைப்பாளர் உபுல் ரோஹண மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆளுநரிடம் முன்வைத்தததுடன் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக ஆளுநர் கூறினார்.




