திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி.
ஒவ்வோரு பிரதேச சபை தேர்விலும் தனிமனித தேர்வே நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்மந்தர் ஐயா இருந்தவரை அது ஓர் தேர்வுக் குழுவின் முடிவாக இருந்தது. அந்த தேர்வுக் குழுவும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொண்டதாகவும் கருத்துக்களை செவிமடுக்க கூடியதாக இருந்தது. அது தமிழரசுக் கட்சின் பொற்காலம். சம்மந்தர் ஐயா ஓர் சகாப்தம் ….!
அவர் எங்களை போன்றவர்களையும் அழைத்து அவிப்பிராயம் கேட்டது. இனி கற்பனையே. சம்மந்தர் ஐயாவுக்கு நிகர் அவர் மட்டுமே என்று இந்த தேர்வு உணர்த்துகிறது.
இரவு பகலாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பாடுபட்டோம் எங்களிடம் ஒரு ஆலோசனை கூட கேட்கவில்லை. வெற்றி கண்ணை மறைத்து விட்டது போல் தெளிவற்ற நோக்கற்ற செயலுக்கு ஓர் தலைமை அவசியமா?
இம்முறை கட்சியின் உள்ளூராட்சி தேர்தல் வெற்றிக்கும் தோல்விக்கும் முழுப் பொறுப்பு சண்முகம் குகதாசன் ஐயா மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது.