2025 அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பானது கல்வி அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாடாசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அத்தோடு, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலைகளுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும் என்பதுடன், ஏப்ரல் முதலாம் திகதி பாடசாலைகள் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
