உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்குடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனைச் சந்தை ஒன்று நாளையதினம் (09.03.2024) புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் இடம்பெற இருக்கின்றது.
தற்கால பொருளாதார நெருக்கடி காலத்தில், உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடும் சிறுதாெழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு, மகளீர் விவகார அமைச்சு, தொழிற்துறை திணைக்களம், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகம், புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆகியவற்றின் அனுசரணையுடன் மாபெரும் பிரதேச விற்பனைச் சந்தை ஒன்று நாளைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை பஸ்தரிப்பு நிலையத்தில் காலை 9 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.
குறித்த விற்பனை சந்தையில் புதுக்குடியிருப்பு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட இருப்பதோடு தேவையான உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாெருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
