யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் மகன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலஞ்சம் பெற்றதாக யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பொலிசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இவ்வாறான முறைப்பாடு பதிவு செய்யப்படும் போது அதனை 48 மணி நேரங்களுக்குள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டியது பொலிசாரின் கடமையாகும். அத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இதுவரை இடமாற்றமோ அல்லது எந்த விதமான ஒழுக்காட்டு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாமல் அதே பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வருகின்றார்.
இந்நிலையில் பொலிசார் இதுவரை குறித்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாது, மூடி மறைப்பதற்கு முயற்சிக்கதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.