யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது.
அந்தவகையில் திருச்சியில் இருந்து நண்பகல் 01.25க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணியளவில் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் எனவும் இண்டிகோ விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.