நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிராந்திய செயலாளர் செனன் கிராமசேவகர் பிரிவில் உள்ள ஹட்டன் செனன் தோட்ட KM பிரிவில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு இலக்கம் (01) இன் கீழ் உள்ள 20 தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நேற்று(03) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இத் தீ விபத்தில் 20 தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அங்கு வாழும் 26 குடும்பங்களில் எவருக்கும் உயிர் சேதமோ காயங்கள் ஏற்படவில்லை.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இவர்கள் செனன் தமிழ்க் கல்லூரியில் தங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற ஜீவன் தொண்டமான் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அத்துடன் நிர்க்கதியாக உள்ள அனைத்து மக்களுக்கும் தங்குமிடம் வசதிகளை செய்து கொடுத்தார் .
தீயை அணைக்க கொமர்சல் பிரிவில் உள்ள இராணுவ சிப்பாய்கள் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தோட்ட தொழிலாளர்கள் முயற்சி செய்தும் பலன் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.
அனைத்து உடமைகளும் தீக்கிரையாகியுள்ளது என தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.



