14 பேருக்கு ஒரு படைச் சிப்பாய் என்ற அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு அமையப்பெற்றுள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இந்தப் படையினரில் நான்கில் மூன்று பகுதியினர் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திறந்தவெளி சிறைச்சாலைக்குள் இன்றும் தமிழர்கள் வாழும் நிலையே இந்த நாட்டில் உள்ளது.
யுத்தம் இல்லாத நாட்டுக்கு ஏன் இவ்வளவு படையினர்?
சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழும் தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கான நேர்த்தியான வேலைத்திட்டத்தை எந்த அரசும் இதுவரை செய்யவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.” – என்றார்.