மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வருடாந்த வட்டியை இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார சபை தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் செலுத்தும் வருடாந்த வட்டியான 11.67 வீதத்தை வீட்டு நுகர்வோர் உட்பட அனைத்து வகை மின்சார நுகர்வோருக்கும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.