வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 20.02.2025 கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.
புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கட்டைக்காட்டை சேர்ந்த குறித்த நபர் 5கிலோ 600 கிராம் போதை பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்தி ஏழு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய மருதங்கேணி பொலிசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.இதனடிப்படையில் ஏழு நாட்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
நீதிமன்ற அனுமதிக் காலம் முடிந்ததும் இன்று (27)சந்தேக நபரை மருதங்கேணி பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
