ரணில் விக்கிரமசிங்க வகுத்த வழியிலேயே தேசிய மக்கள் சக்தி அரசு பயணிக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையையே தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுத்தி வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்க அன்று இட்ட அடிதளத்தில் அநுர பயணிக்கின்றார் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசின் பாதீடு உறுதிப்படுத்துகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தால்தான் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது போலும். தேசிய மக்கள் சக்தி கனவுலகமொன்றை உருவாக்கியது. ஆனால், நடைமுறையில் வேறு விடயம் நடக்கின்றது. இது பற்றி கதைப்பதற்கு பலமான எதிர்க்கட்சி இல்லை. இருக்கின்ற எதிர்க்கட்சி தூங்குகின்றது.” – என்றார்.