ஹட்டன் வெளிஓயா பிரதேசத்தில் பல வருடங்களாக கைவிடப்பட்ட தோட்டத்தில் புதிதாக குடியிருப்பு அமைக்கப்படுகிறது.
இதனால் அப் பகுதியில் நேற்று முன்தினம் பற்றைக் காடாக உள்ள பகுதிக்கு தீ வைத்ததால் அந்த பகுதியில் இருந்த மான் குட்டி ஒன்று தீ காயங்களுடன் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனத் துறை அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.
அவ்வாறு மீட்கப்பட்ட மான் குட்டி தாய் மான் இல்லாத காரணத்தால் இன்று மரணித்து விட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வனப் பகுதியில் தீ வைப்பது மற்றும் பற்றைக் காடாக உள்ள பகுதிகளில் வீடமைப்பு திட்டம் உருவாக்குவதால் சுதந்திரமாக திரியும் பறவைகள் மற்றும் மிருகங்கள் பாரிய அளவில் பாதிப்பை எதிர் நோக்குவதாகவும் இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் இவ்வாறான திட்டங்கள் உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.