காலி துறைமுகத்திற்கு அருகில் திங்கட்கிழமை (24) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
5 அடி 6 அங்குலம் உயரமுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.