சைவத்தமிழ் மன்றம் நடாத்திய இளம் சைவபண்டிதர்கள் மற்றும் சைவ பண்டிதர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில் சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர், சைவ பண்டிதர் பேராசிரியர் தி.சதானந்தன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்த குருக்கள் கலந்துகொண்டார்.
முன்னிலை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம், இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கு.ரவிச்சந்திரன், தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி ந.தர்மசீலன், மட்டக்களப்பு மாவட்ட இந்துக்கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், அம்பாறை மாவட்ட இந்துக்கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சைவத்தமிழ் மன்றத்தின் ஸ்தாபகர் கலாபூசணம் தில்லைநாதன் அவர்கள் இளம் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பட்டங்களை பெறுபவர்களை சத்தியப்பிரமாணம் செய்துவைக்கும் நிகழ்வினை நடாத்தியதை தொடர்ந்து இளம் சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பட்டங்களை வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வின்போது அதிதிகளாக கலந்துகொண்டவர்களும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




