சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆம் ஆண்டிற்கான தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இது தனது நிர்வாகத் திறமையை உலக அரங்கில் நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக பாகிஸ்தான் கருதுகிறது. இதனால் போட்டிகளுக்குத் தேவையான ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்துவதற்கான சதித் திட்டம் இடம்பெறுவதாக பாகிஸ்தான் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெறும் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகளில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பின்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று பகுதிகளில் இத்தொடருக்கான போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.