வாகன விபத்தில் இருவர் படுகாயம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் புது குடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கயஸ் வாகனமும் பரந்தன் பகுதியில் இருந்து விசுவமடு பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலை மாற்றப்பட்ட நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கயஸ் வாகனில் வாகனத்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

