நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் மிஸ்டர் எக்ஸ்.
ரகசிய ராணுவ வீரர்களான ஆர்யா, கௌதம் கார்த்திக் நாட்டின் பாதுகாப்புக்காக ரகசிய ஆபரேஷன் ஒன்றை மேற்கொள்ளும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
டீசரை காண லிங்கை கிளிக் செய்யவும்……https://youtu.be/1IIifCYwTGc