மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக சிவனடி பாத மலைக்கு நேற்று மாலை முதல் அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலை முதல் சுமார் ஒரு லட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்து உள்ளனர் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரச பேருந்து மற்றும் ரயிலில் வந்து பேருந்து மூலம் நல்லதண்ணி வரும் யாத்திரிகர்கள் மற்றும் தனியார் பேருந்து ஏனைய வாகனங்கள் மூலம் வருகை தந்த யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தரிப்பிடங்கள் நிரம்பி நெடுஞ்சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் தற்போது வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரவு வேளையில் மேலும் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி தற்போது வாகனங்கள் நிரம்பிய நிலையில் உள்ளது என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
பெரும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது வரை எவ்விதமான அசம்பாவிதங்களும் இல்லை என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.


