அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 149 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை திரையில் காண ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் திகதி வெளிவரும் என சொல்லப்படுகிறது.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற பிப்ரவரி 28ம் திகதி வெளிவரும் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கின்றனர். இது கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும் அமையும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
அஜித்தின் 64ஆவது படத்தில் இணையும் சந்தோஷ் நாராயணன்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63ஆவது படமான 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10ஆம் திகதி வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 63ஆவது படமான...