ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணப் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சிலில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடரின் 5 ஆவது லீக் ஆட்டம் டுபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் நாளை பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.