நல்லதண்ணி நகரில் உள்ள அவசர அம்புலன்ஸ் சாரதி கடமை நேரத்தில் மது போதையில் இருந்த நிலையில் நல்லதண்ணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் நலன் கருதி நல்லதண்ணி நகரில் அவசர அம்புலன்ஸ் சேவைகள் உள்ளது.
அந்த அவசர அம்புலன்ஸ் சாரதி நேற்று (21) அம்புலன்ஸ் வாகனத்தை செலுத்தும் போது மது போதையில் இருந்த நிலையில் அவரை நல்லதண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பிறிதொரு நாளில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பணிக்கப்பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.