குருநாகல் பகுதியில் இருந்து வந்த யாத்திரிகர் ஒருவர் இன்று காலை(22) உயிரிழந்துள்ளார்.
குறித்த யாத்திரிகர் நல்லதண்ணி சிவனடி பாத மலைக்கு திரும்பி வந்த வேளையில் ரத்து அம்பலம் பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்ததவர் குருநாகல் பகுதியில் உள்ள 83 வயது உடைய கே.ஜெ.ஏ.தர்ம்மதாச ஆவார்.
இவரது சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.