களனிவெளி தொடருந்து பாதையின் பராமரிப்பு பணிகள் காரணமாக, களனி பள்ளத்தாக்கு பாதையில் இன்று (22) மற்றும் நாளை (23) இயக்கப்படவிருந்த 5 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுகேகொட – உடஹமுல்லவுக்கு இடையில் உள்ள பங்கிரிவத்த தொடருந்து கடவையின் பராமரிப்பு பணிகள் காரணமாகவே, இந்த தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே துணை பொது மேலாளர் என்.ஜே. இந்திபோலகே தெரிவித்தார்.
இன்று காலை 08.30 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி இயக்கப்படவிருந்த தொடருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பாதுக்க வரை பிற்பகல் 1.55 க்கு இயக்கப்படும் மெதுவான தொடருந்து, கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளைக்கு பிற்பகல் 4.00 மணிக்கு இயக்கப்படும் அரைகடுகதி தொடருந்து, அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு நண்பகல் 12.25 க்கு இயக்கப்படும் மெதுவான தொடருந்து. பாதுக்கயில் இருந்து கொழும்பு கோட்டைக்கு பிற்பகல் 3.45 க்கு இயக்கப்படும் அரைகடுகதி தொடருந்து என்பன தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.