சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா – பங்கதேஷ் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் கலமிறங்கிய பங்கதேஷ் அணி 49.4 ஓவரில் 228 ஓட்டங்களுக்கு அனைத்து ஆட்டமிழக்க நேரிட்டது.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிக கெட்ச்சுகளை பிடித்த இந்திய வீரர்களுள் அசாருதீனின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார். இருவரும் தலா 156 கெட்ச்சுகளை பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் சங்ககரா (448ல் 218), அவுஸ்திரேலியாவின் பாண்டிங் (375ல் 160) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
