வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (21.02) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் ஏற முற்பட்ட போது நகரில் இருந்து வேப்பங்குளம் 8 ஆம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த பெண் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



