சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி பாகிஸ்தான் பெயருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில். இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, அர்ஷதீப் சிங் ஆகியோர் ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படங்கள் ஐ.சி.சி., எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தப் புகைப்படங்களில் இந்திய அணி வீரர்கள் அணிந்திருக்கும் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.
முதலில் பாகிஸ்தான் இலட்சினையை போட இந்தியா மறுப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது, பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை வீரர்கள் அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.