வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்து மரம் நட்டு வலை வேலி அமைத்து குறித்த காணியை உதவிப் பிரதேச செயலாளர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் – வேப்பங்குளம் பிரதான வீதியில் வசிக்கும் உதவிப் பிரதேச செயலாளர் ஒருவர், தனது மதில் ஓரமாக செல்லும் வாய்காலில் நீண்ட காலத்திற்கு முன்னர் மரம் நட்டுள்ளார். குறித்த மரங்கள் வளர்ந்த நிலையில் தற்போது அம் மரங்களை மறைத்து வலையினால் வேலி அமைத்து குறித்த வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளார்.
உக்குளாங்குளம் மற்றும் 60 ஏக்கர் பகுதியில் இருந்து வழிந்து ஓடும் நீரானது குறித்த வாய்கால் ஊடாகவே தட்சனாங்குளத்திற்கு செல்கின்றது. இவ் வாய்க்காலே தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


