எகிப்து நாட்டின் கிசா மாகாணம் கெர்டாசா நகரில் இன்று காலை அடுக்குமாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்ததோடு 3 பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதாலேயே குறித்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.