சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்த வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை 076 6412029 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு குறுஞ்செய்திகளாக அனுப்பலாம்.
குறித்த வாட்ஸ்அப் இலக்கமானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சேவையில் இருக்கும்.
பொது மக்களால் முன்வைக்கப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.