குறித்த இரு நபர்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளனர்.
மதிவண்ணனும் எனும் நபரும் அவருடைய அத்தான் பிரபாவும் இணைந்து மலேசியா, ருமேனியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளனர்.
இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், மாங்குளம், வடகாடு, மல்லாவிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு மேல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்ததுடன் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளிகளாக மாறி விட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் வேறு நபர்களைக் கொண்டு வன்முறைகளிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் பற்றிய மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.