கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மாவடியம்மன் புதுக்காடு கிராமத்தில் நோர்வே தமிழ் உறவுகளின் நிதி அனுசரணையில் நமசிவாய மூதாளர் பேணலக பவுண்டேசனால் அமைக்கப்பட்ட மூன்று வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் 11.02.2025 நடைபெற்றது.
15 வருடங்களுக்கு மேலாக வீடு மற்றும் குடிநீர், மலசல கூட வசதியின்றி பல அரச அதிகாரிகளிடம் வேண்டிய போதிலும் தமக்கான அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில் வாழ்ந்து வந்த மக்களுக்கு தற்பொழுது நமசிவாய மூதாளர் பேணலகத்தின் ஏற்பாட்டில் தலா ஒன்பது லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அந்நிறுவன தலைவர் திரு.வே.வாமதேவன், செயலாளர் திரு.க.ஜெகரூபன், கிராம சேவையாளர் திருமதி.யு.அல்பிரேட் நிலைக்சி அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஓலைக் குடிசைகளில் வசிக்கும் பெண் தலமைத்துவ மற்றும் மாற்றுத் திறனாளி குடும்பங்களைச் சேர்ந்த பல குடும்பங்களுக்கு நமசிவாய மூதாளர் பேணலக பவுண்டேசனால் புதிய வீடுகள் படிப்படியாக அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




