நாட்டில் திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய்கிழமை (11) நாளொன்றில் தலா ஒன்றரை மணிநேரம் சுழற்சி முறையில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
மின் விநியோக கட்டமைப்பை சீரமைக்க மின்தடையை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட திடீர் மின்தடையையடுத்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்துள்ளன.
குறித்த இயந்திரங்களை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு சுமார் 4 நாட்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்று திங்கட்கிழமையும் (10) நாளை செவ்வாய்க்கிழமையும் (11) பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டம் கட்டமாக ஒன்றரை மணித்தியாலம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.