தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தரையாற்றுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதியில் இன்றைய தினம் 10.02.2025 சுற்றி வளைப்பை மேற்கொண்ட தர்மபுரம் பொலிஸார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும் 45 போத்தல் கசிப்பு 233 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் நான்கு சந்தேக நபர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பொழுது எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.