வீடொன்றில் மூதாட்டியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொ லை செய்துவிட்டு சடலத்தைத் தீ வைத்து எரித்த முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம, தலகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாயே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
மேற்படி நபர் கடந்த 5 ஆம் திகதி ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள நிலையில் அங்கிருந்த 76 வயதுடைய மூதாட்டி ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துவிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மூதாட்டியின் கணவரும் மகனும் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில், மூதாட்டி சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபரான முன்னாள் இராணுவச் சிப்பாய் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைத் திருட முயன்றுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்