கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரால் புரனமைக்கப்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் 06.02.2025 அன்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்ய முற்பட்ட இராணுவ உத்தியோகத்தர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந் நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த இராணுவ உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 09 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து இன்று 07.02.2025 கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.