நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்
துபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களின் விபரங்களும் குற்றச் செயல்களும் பின்வருமாறு ;
- காலி உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த ரன்முனி மஹேஷ் ஹேமன்த சில்வா எனும் 42 வயதுடைய நபர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பெலியத்தை பிரதேசத்தில் இருவர் சுட்டுக் கொ லை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதுடன் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தங்காலை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவரும் ஆவார்.
- கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய கந்தகம தெனியே கெதர பிரதீப் கந்தருவன் எனப்படும் சந்தன 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் காயப்படுத்தல், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொ லை செய்ய முயற்சித்தல்.மேலும் , 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொ லை செய்ய முயற்சித்தல், 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொ லை செய்ய முயற்சித்தல் மற்றும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையிடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடரப்புடையவர் ஆவார்.
- புவக்வத்தை, தென்கந்தலிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நாடகந்தகே உபாலி எனப்படும் ரொட்டும்ப உபாலி 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் நபரொருவரை வெட்டிக் கொ லை செய்தல், 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மாவரல பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொ லை செய்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடரப்புடையவர் ஆவார்.