ஜப்பானின் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியில் வடக்கில் 95 பாடசாலை கட்டிடங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவைத் தளமாக கொண்டு இயங்கும் சேவா லங்கா நிறுவனமானது ஜப்பானின் நிப்பொன் பவுண்டேசன் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் 95 பாடசாலை கட்டிடங்களை புனரமைத்தல் மற்றும் புதிதாக நிர்மாணித்தல் வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தின் மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் ஒன்றினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இருந்து வருகை தந்த நிப்பொன் பவுண்டேசன் உயர் அதிகாரிகள், சேவாலங்கா நிறுவனத்தினர் ஆகியோர் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு விஜயம் செய்து குறித்த சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டதுடன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருடனும் இதன்போது கலந்துரையாடி இருந்தனர்.





