சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வரும் போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று தனது 40 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
ரொனால்டோவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், ரொனால்டோ தான் உலகத்திலேயே சிறந்த கால்பந்து வீரர் என்றும், தன் கால்கள் சொல்லும் வரை தான் கால்பந்து விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,
கால்பந்து வரலாற்றில் நான் தான் அதிக கோல் அடித்தவன். எனக்கு இடது கால் பழக்கம் இல்லை. என்றாலும், இடது காலால் அடித்த கோல்களுக்காக வரலாற்றில் முதல் 10 இடங்களில் இருக்கிறேன். இவை எண்கள், இதுவரை இல்லாத முழுமையான வீரர் நான். நான் என் தலையால் நன்றாக விளையாடுகிறேன், நான் வேகமாக இருக்கிறேன், நான் வலிமையாக இருக்கிறேன், நான் குதிக்கிறேன். என்னை விட சிறந்தவர்களை நான் பார்த்ததில்லை.” என்று கூறினார்.