கைது புனகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூனகரி பகுதியில் பூநகரி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்று 05. 02.2025 யாழ்ப்பாணப் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கூலர் வாகனத்தில் இருந்து 60 கிலோ கஞ்சாவும் இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கஞ்சாவை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனம் என்பனவற்றை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தடையப் பொருட்கள் அனைத்தும் அன்று06.02.2025 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பூனகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுவான் அசிரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

